மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழ்நிலையில், அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால், கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்கா முன்னெடுத்து வரும் சர்வதேச கூட்டணி முயற்சிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
அமெரிக்கா – ஈரான் மோதல் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்தும், ஹார்முஸ் நீரிணை இன்னும் மூடப்பட்டே உள்ளது. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் சுமார் 20% பாதிக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
ஏப்ரல் 8 முதல் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமெரிக்கா மேற்கொண்ட கடற்படை தடைக்கு பதிலாக இரான் இன்னும் நீரிணையைத் தடுத்தே வைத்துள்ளது. இதனால், பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமின்றி முடங்கியுள்ளன.
புதிய தாக்குதல்களுக்கு அமெரிக்கா ஆய்வு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த புதிய ராணுவ தாக்குதல்கள் குறித்து ஆலோசனை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி வியாழக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பது நியாயமல்ல என தெரிவித்ததாக, அதிகாரப்பூர்வ இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. யார் நடுவர் என்றதைக் கவனிக்காமல், குறுகிய காலத்திலேயே முடிவை எட்டலாம் என்று எதிர்பார்ப்பது எனது பார்வையில் யதார்த்தமானதாக இல்லை,” என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வியாழக்கிழமை இரவு தெஹ்ரான் நகரின் சில பகுதிகளில் வான்வழி பாதுகாப்பு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக, மெஹர் நியூஸ் ஏஜெண்சி தெரிவித்துள்ளது. அதேசமயம்,தஸ்னீம் நியூஸ் ஏஜெண்சி வெளியிட்ட தகவலின்படி, சிறிய மனிதர் இல்லா விமானங்கள் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்களை எதிர்த்து வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டன.
இந்த தகவல் வெளியானதும், உலக எண்ணெய் சந்தையில் அதிர்வு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 126 டாலரைத் தாண்டியது; பின்னர் அது 114 டாலருக்கு குறைந்தது.
இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள்,
“அமெரிக்கா மீண்டும் தாக்கினால், அதன் பிராந்திய தளங்களும் போர் கப்பல்களும் நீண்ட வேதனையான தாக்குதல்களை எதிர்கொள்ளும்” என்று எச்சரித்துள்ளனர்.
மேலும், இரான் உயர் தலைவர், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டைத் தொடர்ந்து வைத்திருப்போம் என்றும், வெளிநாட்டு தலையீடுகளை அனுமதிக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நீரிணை மூடல் நீடித்தால், உலக பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடீர்ரெஸ் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
- உலகளாவிய வளர்ச்சி வீழ்ச்சி அடையும்
- பணவீக்கம் அதிகரிக்கும்
- கோடிக்கணக்கான மக்கள் வறுமை மற்றும் பட்டினியில் தள்ளப்படலாம்
பயண எச்சரிக்கை மற்றும் பிராந்திய பதற்றம்
பிராந்திய பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பயண எச்சரிக்கை மற்றும் பிராந்திய பதற்றம்
பிராந்திய பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், தனது குடிமக்கள் இரான், லெபனான், ஈராக் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்யத் தடை விதித்துள்ளது. அங்கு உள்ளவர்கள் உடனடியாக திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்கா–இரான் மோதல், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
போர் நீடித்தால், இது ஒரு பிராந்திய பிரச்சினையாக மட்டும் இல்லாமல், உலகளாவிய நெருக்கடியாக மாறும் அபாயம் அதிகரித்துள்ளது.